அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கான உடற் பரிசோதனை செய்து உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. அதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றவை.