பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த மலையாள நடிகர்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் லால் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது


படத்தின் ஷூட்டிங் வரும் 12ம் தேதி துவங்கவுள்ளது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனால் ரசிகர்களுக்குப் படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் லால் நடிக்கவுள்ளார். இது குறித்து லால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது நடிப்பு திரையுலக பயணத்தில், நானா சென்று வாய்ப்பு கேட்டது என்றால் அது மணிரத்தினத்திடம் மட்டுமே. எனக்கு சுஹாசினியை தெரியும் என்பதால் மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்டேன்.


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கடல் படத்தில் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். ஆனால் மற்ற பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை என்னால் ஏற்க முடியவில்லை. தற்போது அதை நினைவு வைத்துக் கொண்டு மீண்டும் அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.